தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மற்றும் மார்த்தாண்டம் பட்டி பகுதியில் நடைபெறும் கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்த கோரி தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாய சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அனல்மின்ம் நிலையம் அமைக்கப்படுவதற்காக பட்டா நிலத்தில் சவுடு மண் என்ற பெயரில் ஆற்று மணலை அனுமதியின்றி முறைகேடாக அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டியும் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டியும் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது இதே போன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மார்த்தாண்டம் பட்டியில் அரசு அனுமதி அளித்த இடத்தில் இல்லாமல் சின்ன மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான  விவசாய நிலத்தில் முறைகேடாக மணலை அள்ளி மணல் கொள்ளையர்கள் விற்பனை செய்து வருகின்றனர் இது தொடர்பாக வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரியிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இதை எடுத்து இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி மற்றும் விளாத்திகுளம் பகுதியில் நடைபெறும் கனிமவள கொள்ளையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது