விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் - சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்.. ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான மாட்டு வண்டி - முதலிடம் நோக்கிச் சென்ற மாடு உயிரிழந்ததால் சோகம் - வீல் சேதமடைந்த நிலையிலும் முதல் பரிசை தட்டிச் சென்ற மாட்டு வண்டி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எப்போதும் வென்றான் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு சின்ன மாடு , பூஞ்சிட்டு, தேன்சிட்டு என மூன்று பிரிவில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இதில் சின்ன மாட்டு வண்டி போட்டியில் 17 மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 17 மாட்டு தேன் சிட்டு மாட்டு வண்டியில் போட்டியில் 30 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிகளை அயிரவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் முருகேச பாண்டியன் தொடங்கி துவக்கி வைத்தார்.
சின்ன மாட்டு வண்டி போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த சிங்கிலிபட்டி சங்கு சாமி மாட்டு வண்டியும் 2வது இடத்தை வள்ளியூர் ஆனந்த தேவர், 3 வது இடத்தை மஞ்ச நாயக்கன்பட்டி வீர ஜோதி, மாட்டு வண்டியும், 4-வது பல்லாக்குளம் முரளிதரன்,மாட்டு வண்டியும் வெற்றி பெற்றது.பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியில் முதல் இடத்தை பிடித்த எப்போதும் வென்றான் லிங்கம்மாள் மாட்டு வண்டியும், 2வது வனராஜா, மாட்டு வண்டியும், 3வது இடத்தை பிடித்த பொம்மையாபுரம் மதன்குமார் மாட்டு வண்டியும், 4-வது தெற்கு சில்கம்பட்டி கருப்பசாமி மாட்டு வண்டியும் பிடித்தன.தேன் சிட்டு மாட்டுவண்டி போட்டியில் முதலிடத்தை பிடித்த கூட்டுறவுங்காடு சகுந்தலா வனரோஜா,மாட்டு வண்டியும் 2வது இடத்தை பிடித்த பொன் முத்தையாபுரம், 3வது வள்ளியூர் முத்தையா தேவர், 4வது தேனி மாவட்டம் கம்பம் ஏ.ஆர் ராமச்சந்திரன் மாட்டு வண்டியும் வெற்றி பெற்றது.சீறிபாய்ந்து சென்ற காளைகளை சாலையின் இருபுறங்களிலும் இருந்து மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டிகள் மற்றும் சாதனைகளுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.இதற்கிடையில் 6-மைல் தூரம் நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 17 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டது இதில தேனி மாவட்டம் சின்ன ஓவலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரிஸ் என்பவருக்கு சொந்தமான மாட்டு வண்டி முதல் இடத்தைப் பிடிப்பதற்கு எல்கை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளளது. இதில் ஒரு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது... இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இது குறித்து எப்போதுவென்றான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் நாலாந்தலா வை சேர்ந்த முருகேசன் ஓட்டி வந்த மாட்டு வண்டி ஒரு வீல் சேதமடைந்த நிலையில்அதனையும் பொறுப்பெடுத்தாமல் கொடி வாங்கியதில் இருந்து எல்லைக் கோடு வரை பிரம்பல வண்டி செலுத்தி முதலிடம் பெற்று பரிசை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது...