அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்ய விமான மூலம் வருகை தந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் அமைப்புச் செயலாளர் என் சின்னத்துரை உள்ளிட்ட அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் இன்று செய்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாகைகுளம் விமான நிலையத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன், கழக அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை, முன்னாள் அமைச்சர்கள் தளைவா சுந்தரம், கடம்பூர் ராஜு, நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பாப்புலர் முத்தையா, சுதா பரமசிவம், சங்கரலிங்கம், சந்தானம், உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் சால்வை பூங்கொத்து வழங்கி வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் ராஜசேகர், மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், சார்பு அணி செயலாளர்கள் வழக்கறிஞர் யு.எஸ்.சேகர், நடராஜன், கே.ஜெ.பிரபாகரன், பில்லா விக்னேஷ், ஜெ.ஜெ. தனராஜ், வழக்கறிஞர் சரவணன், மாவட்ட இளைஞர் பாசறை பொருளாளர் புல்லட் பரிபூரண ராஜா, ஒன்றியச் செயலாளர்கள் விஜயகுமார், ராஜ்நாரயணன், சௌந்தரபாண்டி பகுதி கழகச் செயலாளர் ஜெய்கணேஷ், முருகன், முன்னாள் துணை மேயர் சேவியர்,பகுதி இளைஞரணி திருச்சிற்றம்பலம், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, மாநகராட்சி எதிர்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல செயலாளர் கல்விக்குமார், நகர கழக செயலாளர்கள் காயல் மௌலானா, மகேந்திரன், பேரூராட்சி கழக செயலாளர்கள் காசிராஜன், செந்தில்ராஜகுமார், துரைச்சாமி ராஜா, வேதமாணிக்கம், அசோக்குமார், செந்தமிழ்சேகர், கிங்சிலிஸ்டார்லின், குமரகுருபரன், கோபாலகிருஷ்ணன், ஆறுமுகநயினார், முன்னாள் கவுன்சிலர்கள் சென்பகசெல்வன், ஜோதிமணி, எம்.பெருமாள், வட்ட செயலாளர் நவசாத், சுப்பிரமணியன், நிர்வாகிகள் வக்கில் முனியசாமி, வக்கீல் சரவணபெருமாள், ராஜேந்திரன், சேம்ராஜ், சகாயராஜ், யுவன் ஷங்கர், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு, உரக்கடை குனசேகரன், மனுவேல்ராஜ், மகாலிங்கம், குலசை சங்கரலிங்கம், அமிர்தாமகேந்திரன், பி.ஜே.சி.சுரேஷ், கவிஞர் ஜான்சன்தேவராஜ், டேஸ்பர் மஸ்கர்னாஸ், நாசரேத் ஜூலியட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதைத்தொடர்ந்து கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டு சென்றார்.