கோவில்பட்டி புதுக்கிராமத்தில் தரமற்ற சாலை அமைக்கப்படுவதாக கூறி சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பாஜகவினர் போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட புதுக்கிராமத்தில் நகராட்சி சார்பில் அமைக்கப்படும் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாகவும், கையில் அள்ளினால் ஜல்லி கற்கள் வரும் நிலையில் இருப்பதாக கூறி அப்பகுதி பொது மக்கள் மற்றும் பாஜகவினர் சாலைப்பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட புதுக்கிராமத்தில் 48 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தார் சாலை அமைக்கும் பணிகள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வருவதாகவும், பெயரளவிற்கு சாலை அமைக்கப்படுவதாகவும். சாலை அமைக்கப்படும் ஜல்லி கற்கள் கையில் அள்ளும் அளவிற்கு தான் இருப்பதாக கூறி அப்பகுதி பொது மக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் திடீரென பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரமான முறையில் சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து தகவல் கிடைத்தும் நகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்;. தற்பொழுது சாலை அமைக்கப்படும் தொடக்கபணிகள் தான் நடைபெற்று வருகிறது.தரமான முறையில் சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.