சாகித்யா பால புரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கருக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ நேரில் சென்று வாழ்த்து - செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கருக்கு அவர் எழுதிய ஆதனின் பொம்மை என்ற நாவலுக்கு சாகித்யா பால புரஸ்கர் விருது கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சாகித்யா பால புரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ இன்று சென்று  வாழ்த்து தெரிவித்தார்.மேலும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியும், செல்போன் மூலமாக எழுத்தாளர் உதயசங்கருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதையெடுத்து முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூக்கு, எழுத்தாளர் உதயசங்கர் தான் எழுதிய ஆதனின் பொம்மை நாவலை நினைவு பரிசாக வழங்கினார்.