தமிழகத்தில் மாநகராட்சி மேயர், மாமன்ற உறுப்பினருக்கு மாத ஊதியம் வழங்கப்படும் என உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து மேய ஜெகன் பெரியசாமி தலைமையில் தீர்மானம்: பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மேயர் வேண்டுகொள்.  தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், மாநகர துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மன்ற உறுப்பினர்களுக்கு மாதார்ந்த மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்டுள்ள  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசும்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பெய்யாத நிலையிலும், மாநராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். மாநகரில் சாலைப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது என்றார். இதனைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.திமுக கவுன்சிலர் ரெக்ஸ்லின் பேசும்போது, "பனிமய மாதா தங்கத் தேர் திருவிழாவை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளுக்காக மேயருக்கும், ஆணையருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாநகராட்சி சுகாதார குழு தலைவர் எஸ் சுரேஷ் குமார், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி, கலைச்செல்வி தியாகராஜ், நிர்மல், அன்னலட்சுமி கோர்ட் ராஜா, கல்வி குழு தலைவர் அதிர்ஷ்ட மணி ரவிந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், கீதா முருகேசன் ரெங்கசாமி,  முத்துவேல், அந்தோணி பிரகாஷ் மார்க்ஸ்லின் மெடின்டா டேனியல் ரெக்சிலின், ஜாக்லின் ஜெயா, அதிமுக கட்சி மாமன்ற உறுப்பினர் மந்திரமூர்த்தி,  காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர் எடிண்டா,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாமன்ற உறுப்பினர் மும்தாஜ், இளநிலை பொறியாளர் சரவணன், மாநகராட்சி உதவி ஆணையர்கள் சந்திரமோகன், சேகர், தனசிங், பிரிண்ட்ஸ், காந்திமதி, பாலன்,  மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.