தூத்துக்குடியில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் கலவரத்திற்கு காரணமான மணிப்பூர் அரசை டிஸ்மி செய்யவேண்டும் உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட கோரி தூத்துக்குடி மாவட்ட மாந்தநேய உணர்வாளர்கள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்; பெண்கள், குழந்தைகள் பாதிரியார்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக இரண்டு இன குழுக்களுக்கு இடையே கலவரம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகள் நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட மாந்த நேய உணர்வாளர்கள் அமைப்பு சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே பெண்கள் குழந்தைகள் உப்பள தொழிலாளர்கள் பங்கு தந்தைகள் பாதிரியார்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான மணிப்பூர் அரசை உடனடியாக மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்தியா
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
Admin
1 நிமிட வாசிப்பு