தூத்துக்குடி தமிழக கட்டிட தொழிலாளர் பொதுநல மத்திய முன்னேற்ற சங்க மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கட்டட தொழிலாளர்களுக்கு பல்வேறு மருத்துவ சலுகைகளை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

தூத்துக்குடியில் தமிழக கட்டிட தொழிலாளர் பொதுநல மத்திய முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் கூட்டம் மாநில தலைவர் நெல்லை எஸ் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட தலைவர் மாரியப்பன் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் மாநில துணைத்தலைவர் பழனி மகாராஜன் மாவட்ட பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 60 வயதுக்குட்பு உட்பட்ட கட்டுமான தொழிலாளர் வாழ்வாதார மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இறுதய அறுவை சிகிச்சை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை டயாலிஸி புற்றுநோய் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களாள் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவியாக ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 12000 வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது .கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 2000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் குடும்ப ஓய்வூதியம்ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் மேலும் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கி வரும் நலத்திட்ட உதவிகளை விளக்கி மாவட்ட வாரியாக விழிப்புணர்வு இருசக்கர வாகன பிரச்சாரம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.