விளாத்திகுளம் அருகே காமராஜரின் 121வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு - மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது.தமிழக முன்னாள் முதல்வர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாள் விழா மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் ஆணி கொடை விழாவை முன்னிட்டு,தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, இதில் திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டு சிரிப்பாய்ந்தன, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மட்டும் ஒட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை மற்றும் சில்வர் அண்டா பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது, இதில் பெரிய மாட்டிற்கான முதல் பரிசு ரூபாய் 50,121 விளாத்திகுளம் எட்டையபுரம் நகரச் செயலாளர் ராஜ்குமார் வழங்கினார் இந்நிகழ்வில், குளத்தூர் நகரச் செயலாளர் வேலுமயில், வைப்பார் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் செண்பகப் பெருமாள் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்,நடைபெற்ற மாட்டு வண்டியை பந்தயத்தை சாலையின் இரு புறமும் என்று ஏராளமான பொதுமக்கள் கண்ட ரசித்தனர்.