தூத்துக்குடி மாவட்டம்: 16.07.2023

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 3 எதிரிகள் கைது - ரூபாய் 1,86,000/-  மதிப்புள்ள 254 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு திருமதி. விஜயலட்சுமி, உதவி ஆய்வாளர் திரு. ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (15.07.2023) குளத்தூர் முத்துக்குமாரபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது,  அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சாக்கு மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் முத்துக்குமாரபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சங்கர் மகன் பெருமாள் (52), குளத்தூர் பெரியார் நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மாரியப்பன் (38),  மற்றும் வெள்ளாரம் பகுதியை சேர்ந்த நயினார் மகன் செல்வம் (65) ஆகிய 3 பேரும் என்பதும், அவர்கள் மேற்படி பெருமாள் என்பவருக்கு சொந்தமான முத்துக்குமாரபுரம் பகுதியில் உள்ள ஆட்டுக்கொட்டகையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது.

உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரிகளான மாரியப்பன் பெருமாள் மற்றும் செல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 1,86,252/- மதிப்புள்ள 254 கிலோ 2 கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.