உலக யோகா தினத்தை முன்னிட்டு, விளாத்திகுளத்தில் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் காவல்துறையினருக்கு சிறப்பு யோகா பயிற்சி முகாம்!

"சர்வதேச யோகா தினத்தை" முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் விளத்திக்குளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் சிறப்பு யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் தமிழ் அமுதன் மற்றும் யோகா& இயற்கை மருத்துவர் ஜனார்சன் ஆகியோர் கலந்து கொண்டு காவலர்களுக்கு யோகாசனங்களை பயிற்சிவித்தனர். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு யோகா பயிற்சியில் விளாத்திகுளம் உட்கோட்டத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனங்கள் செய்தனர். இதனைத்தொடர்ந்து விளாத்திகுளம் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவு சார்பில் காவலர்களுக்கு மா, பலா, வாழை என முக்கனிகளும்,வழங்கப்பட்டது.