தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கழிவுகளை அகற்றுவதற்காக உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி தமிழக அரசு சார்பில் துணை ஆட்சியர் கௌரவ் குமார் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு வருகை இன்னும் சற்று நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கழிவுகளை அகற்றுவதற்கான பணிகள் துவங்க உள்ளன.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் ஆலையிலிருந்து கழிவுகளை அகற்ற வேண்டும் மேலும் பசுமை வளயத்தை பராமரிக்க வேண்டும் ஆலையை பராமரிக்க வழங்க வேண்டுமென மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஜிப்சம் கழிவு அபாயகரமான கழிவு மற்றும் பசுமை வளையத்தை பராமரிக்க துணை ஆட்சியர் கௌரவ குமார் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, மாநகராட்சி பொறியாளர், தீயணைப்பு அதிகாரி, மற்றும் ஸ்டெர்லைட் ஆலை சார்பாக இரண்டு பேர் என 9 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைத்தது.
இந்த கண்காணிப்பு குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக ஜூன் 7-ம் தேதி முதல் பல்வேறு கட்ட ஆய்வு பணிகளை மேற்கொண்டு கழிவுகளை அகற்றும் பணியை கண்காணிக்க ஆலை முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்தினர்.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து இன்று காலை 10 மணி முதல் கழிவுகளை அகற்றும் பணி துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது இதை தொடர்ந்து ஆலைக்கு காலை 9 மணி அளவில் துணை ஆட்சியர் கௌரவ குமார் தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட கண்காணிப்பு குழுவினர் ஆலைக்கு வந்து ஆலோசனை செய்து வருகின்றனர். கண்காணிப்பு குழு ஆலோசனைக்கு பின்பு கழிவுகளை அகற்றும் பணி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.