தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் மதிமுக நடத்தும்  கையெழுத்து இயக்கம்  தொடங்கியது.

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில சட்டப்பேரவையின் செயல்பாடுகளுக்கும், தமிழ்நாடு ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார், அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு எதிராக பேசி இந்தியா மதம் சார்ந்த நாடுகள் தான் என்றும், அரசியல் சார்ந்த அதுவும் பாஜக அரசியல் சார்ந்த கருத்துக்களை பேசி அரசியல் சட்டத்தை மதிக்காமல் அரசியல் சட்டப்படி எடுத்துக் கொண்டுள்ள பதவி பிரமாணத்தை ஆளுநர் மீறிவிட்டார், எனவே ஆளுநர் ஆர்.என். ரவியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களாகிய நாங்கள் குடியரசுத் தலைவரை கேட்டுக்கொள்கிறோம் என்ற கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மதிமுக  சார்பில் பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை

மதிமுக துணை பொதுச்செயலர் தி.மு.ராஜேந்திரன்  தொடங்கி வைத்தார். இதில், மதிமுக மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலர் விநாயகா ஜி.ரமேஷ், நகர செயலர் எஸ்.பால்ராஜ், நகர இளைஞரணி செயலர் முத்துகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலர்அ.சரோஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலர் எம்.தெய்வேந்திரன், சக்திவேல், திமுக சார்பில் சிவா, காளியப்பன் , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலர் கதிரேசன், வழக்குரைஞர் அணி மாவட்டச் செயலர் பெஞ்சமின் பிராங்கிளின், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் திருப்பதி ராஜா, பொருளாளர்  காமராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இதுபோல இனாம் மணியாச்சி விலக்கு அருகே மதிமுக ஒன்றியம் சார்பில் 

கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலர்கள் சரவணன், கேசவ நாராயணன்,மாரிச்சாமி , ராஜ்குமார் உள்பட கூட்டணி கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.இந்த கையெழுத்து இயக்கம் ஒரு மாதம் நடைபெறும் என்றும், பின்னர் கோரிக்கை மனுவை குடியரசு தலைவரிடம் மதிமுக பொதுச்செயலர் வைகோ வழங்குவார் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

.