தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூரை அடுத்து உள்ள பனையூரில் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இதில் ஊர் நிர்வாகம் மற்றும் பழைய மாணவர் சார்பில் ரூபாய் 1,லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்பு உருவாக்கப்பட்டது.இதற்கான திறப்பு விழாவில் மார்கண்டேயன் எம் எல் ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்மார்ட் வகுப்பை திறந்து வைத்தார்.தொடர்ந்து பள்ளிக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு ரூ 25000 நிதி உதவி வழங்கினார். மேலும் பள்ளியை புதுப்பிப்பதற்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தார்.

நிகழ்ச்சியில் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் ஆதிமாரீஸ்வரன்,பள்ளி சங்கத் தலைவர் மாரிச்செல்வம், துணைத்தலைவர் பாலமுருகன், பொருளாளர் செல்வகுமார், பள்ளி தலைமை ஆசிரியை மரிய அனிதா, குளத்தூர் பஞ்சாயத்து தலைவர் மாலதி செல்லப்பாண்டியன், துணைத்தலைவர் மாரிச்செல்விபாலமுருகன், கிராம தலைவர் பாண்டி, துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் கோபால் ,தங்கமணி, முத்துவேல், காசிமாரியப்பன், ராஜகோபால், நம்பிராஜன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் உட்பட ஆசிரியர் ஆசிரியைகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.