தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலநம்பிபுரம் கிராமத்தை சேர்ந்த வேலு என்பவரின் மனைவி பாப்பா (75),பாப்பா கணவர் வேலு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் அவரது மகன் மாயாண்டி உடன் பாப்பா வசித்து வந்துள்ளார்.பாப்பாவிற்கு கண்பார்வை குறைபாடு மற்றும் உடலில் பல்வேறு பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.இதனால் மனவிரத்தில் இருந்து வந்த பாப்பா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மன்னனையை ஊற்றி  தனக்குத் தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இது குறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் காவல் நிலைய போலீசார், பாப்பாவின் உடலை கைப்பற்றி  எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.