தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியில் இருந்து விடுவிக்கக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ராஜபாளையம் சாலையில் அமைந்துள்ள தபால் நிலையம் முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியில் இருந்து விடுவிக்க கோரி இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில் மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்த கையெழுத்து இயக்கத்தில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான வழக்கறிஞர் ராஜா முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மதிமுக துணை பொது செயலாளர்.
தி.மு.ராஜேந்திரன் மற்றும் மதிமுக வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சதன் திருமலைகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடர்ந்து கையெழுத்திட்டனர்..
நிகழ்ச்சியில் ஏற்பாடுகளை சங்கரன்கோவில் நகர மதிமுக செயலாளர் ரத்தினவேல்குமார் ஏற்பாடு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் மதிமுக மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர்.சுப்பராஜ், மதிமுக மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியம், குருவிகுளம் ஒன்றிய பெருந்தலைவர் விஜயலட்சுமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குழந்தை வள்ளுவன்,
திமுக மாவட்ட பொருளாளர் சரவணன், திமுக ஒன்றிய செயலாளர் பெரியதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.