தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக ஆலையில் உள்ள சிப்சம் கழிவுகளை உடைக்கும் பணியும் பசுமை வளையத்தை பராமரிக்கும் பணியும் துவக்கம் கழிவுகள் வருகிற வெள்ளிக்கிழமை முதல் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் என சார் ஆட்சியர் கௌரவகுமார் பேட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கழிவுகளை அகற்றுவதற்காக உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி தமிழக அரசு சார்பில் சார் ஆட்சியர் கௌரவ்குமார் தலைமையில் 9 பேர் கொண்ட கண்காணிப்பு மேலாண்மை குழு அமைக்கப்பட்டு கழிவுகளை அகற்றுவதற்கான ஆய்வு பணிகளை ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 10 தினங்களாக மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் சார் ஆட்சியர் கௌரவ்குமார் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் அடங்கிய கண்காணிப்பு குழுவினர் இன்று ஸ்டெர்லைட் ஆலையில் சிசிடிவி கேமரா மற்றும் ஆலை உள்ளே செல்லும் வாகனங்களை பதிவு செய்யும் பதிவேடு ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அகற்றப்பட உள்ள ஜிப்சம் கழிவுகளை உடைப்பதற்காக கொண்டுவரப்பட்ட இரண்டு எஃப் எல் இயந்திரங்களை கண்காணிப்பு குழுவினர் ஆலை உள்ளே அனுமதித்து சிப்சம் கழிவு உடைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சார் ஆட்சியர் கௌரவ குமார் பேசும்போது சிசிடிவி கேமரா ஆலை உள்ளே மற்றும் வெளியே இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

தற்போது சிப்சத்தை உடைக்கும் பணி துவங்கியுள்ளது கழிவுகள் இன்னும் இரண்டு நாள் கழித்து வெள்ளிக்கிழமை முதல் அகற்ற அகற்றப்படும் சிப்சம் தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தார். மேலும் பசுமை வளையத்தை பராமரிக்கும் பணியும் இன்று துவங்கியுள்ளது என அவர் தெரிவித்தார்.