மாநில அளவில் சிலம்பப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மாணவியை சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நேரில் அழைத்து பாராட்டினார்

தமிழக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் மாநில அளவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.நடைபெற்ற போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் அரசினர் தொழிற்பெயர்ச்சி நிலையத்தில் எலக்ட்ரீசியன் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி சசிகலா பங்கேற்று சிலம்பப் போட்டியில்  தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.சசிகலாவிக்கு தமிழக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில்  பரிசு  மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில் சசிகலாவை கவுரவிக்கும் விதமாக இன்று 21-06-2023 புதன்கிழமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்  சசிகலாவை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார்.