தூத்துக்குடியில் போக்குவரத்து காவல்துறையினர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிரடி வாகன சோதனை இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளம் சிறார்களின் வாகனங்கள் மற்றும் நம்பர் பிளேட் வாகன பதிவு முறையாக இல்லாத வாகனங்கள் பறிமுதல் 200க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு?
தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களை இளம் சிறார்கள் ஓட்டி வாகன விபத்து ஏற்பட்டு பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுவதை தொடர்ந்து தமிழக முழுவதும் இருசக்கர வாகன வாகன சோதனையில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியான வ உ சி சாலையில் போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் தலைமையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஏராளமான இளம் சிறார்கள் விதிமுறைகளை மீறி ஒட்டி வந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருசக்கர இளம் சிறார்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் இனிமேல் இருசக்கர வாகனங்கள் வழங்க கூடாது என காவல்துறையினர் அறிவுரை கூறினர்.மேலும் இருசக்கர வாகனங்களில் அரசு அறிவித்தபடி முறையான நம்பர் பிளேட் வைக்காத இரு சக்கர வாகனங்கள் மற்றும் அதிக ஒளி எழுப்பக்கூடிய சைலன்ஸர் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடிய இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிக்கப்பட்டு காவல்துறையினர் முன்னிலையில் அந்த இளைஞர்கள் நம்பர் பிளேட்டை வாகனத்தில் இருந்து அகற்றினர்.
மேலும் சிலர் போக்குவரத்து போலீசாரை கண்டவுடன் இருசக்கர வாகனத்தில் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி மேற்கொண்டு சில தப்பி ஓடினர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் இருசக்கர வாகன சாவியை பறிமுதல் செய்து கொண்டனர்.தூத்துக்குடி மாநகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் இருசக்கர வாகனத்தில் நடைபெறும் குற்ற செயல் மற்றும் விபத்துகளை தடுக்கும் வகையிலும் இள சிறார்கள் மற்றும் முறையாக நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களை மட்டுமே பிடித்து வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.