மேலதூவல் கிராமத்தில்  கும்பாபிஷேக விழா வடமாடு மஞ்சுவிரட்டு-12 காளைகள்   108 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலத்தூவல் கிராமத்தில்   ஸ்ரீ காளியம்மன்  ஸ்ரீ முருகன்  ஸ்ரீ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு    வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.இதில்  ராமநாதபுரம், மதுரை திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை ,புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட  பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 காளைகள் 108 மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பங்கேற்ற காளைகளுக்கு தல 25 நிமிடம் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன களத்தில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப் பணம் சில்வர் அண்டா குத்துவிளக்கு  பானை சேர் கட்டில்  நினைவு பரிசுகளாக வழங்கப்பட்டது.வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை முதுகுளத்தூர் ,கமுதி ,கடலாடி, பரமக்குடி  உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.