விளாத்திகுளம் அருகே  பைக் மீது கார்  மோதல் - பைக்கில் கோவிலுக்குச் சென்ற தம்பி உயிரிழப்பு - அக்கா படுகாயம் - போலீசார் விசாரணை ?தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள A. குமாரபுரம் கிராமத்தை சேர்ந்த சௌந்தரவேல் என்பவரது மகன் தமிழ்செல்வன் (35), இவரும் அவரது சகோதரி தமிழ்செல்வி (45) இருவரும் விருதுநகர் மாவட்டம் நல்லியில் உள்ள சிங்கமுடையார் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.  மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கோட்டூர் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் , பைக் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. சிறிது தூரம் பைக்கினை இழுத்துச் சென்று கார் நின்றுள்ளது. இதில் பைக்கில் சென்ற தமிழ்செல்வன் தமிழ்செல்வி இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதில் படுகாயமடைந்த தமிழ்செல்வன் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும்  எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த தமிழ்ச்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் உயிரிழந்த தமிழ்ச்செல்வன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காரை ஒட்டி வந்த மதுரை கோச்சடையைச் சேர்ந்த சந்தோஷ் பிரசன்னா என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தோஷ் பிரசன்னா மதுரையில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றது தெரியவந்துள்ளது.