தூத்துக்குடி கடந்த 20 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் குடியிருப்பிற்கு பட்டா வழங்கப்படாதை கண்டித்து மாற்றுத் திறனாளிகள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை. தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி கிராமத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு அதில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக பட்டா கேட்டு பலமுறை போராடியும் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட வருவாய் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதை அடுத்து பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இருபது ஆண்டுகளாக பட்டாவிற்காக போராடிவரும் தங்கள் குடியிருப்புக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக முறையாக பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.