தூத்துக்குடி மாவட்டம் பழைய காயல் கிராமத்தில் தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லக்கூடிய பாதையை அடைத்து ஆக்கிரமிப்பு செய்தும் இஸ்லாமிய பெண்களை அவதூறாக பேசி ய  ஸ்டான்லி என்ற தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பழைய காயல் கிராமம் இந்த நெடுஞ்சாலையை ஸ்டான்லி என்ற தனிநபர் ஏற்கனவே நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடையை கட்டி உள்ளத்துடன் தற்போது இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லக்கூடிய பாதையை நேற்று மணல் கற்களால் அடைத்து ஆக்கிரமிப்பு செய்ய முயன்றுள்ளார் இதை தொடர்ந்து அங்கு வந்த அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்களை ஆபாசமாக பேசி சில பெண்களை  ஸ்டான்லி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தாசில்தார் மற்றும் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தனி நபருக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகவும் எனவே அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து ஒழுங்கு சீர்குலைவிற்கு காரணமான ஸ்டான்லி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி இன்று பாதிக்கப்பட்ட பழையகாயல் பகுதியை சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் மேலும் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.