தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சொத்து தகராறு காரணமாக கணவனுடன் சேர்ந்து வாழ விட உறவினர்கள் எதிர்ப்பதால் நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு கைக்குழந்தையுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரி அருகே உள்ள ஆலந்தா கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவன் இவருக்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த தன்னுடன் பள்ளியில் படித்த ஏற்கனவே திருமணம் ஆகி கணவனால் கைவிடப்பட்ட மீனா என்ற பெண்ணை குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார்.இதில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பரமசிவத்தின் தந்தை மற்றும் உறவினர்கள் அவருக்கு சொத்தில் பங்கு வேண்டும் என்றால் திருமணம் செய்த மீனாவை விட்டு வர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்,
மேலும் அரசு அதிகாரிகளிடம் பரமசிவனுக்கு திருமணம் ஆகவில்லை என்று சான்றிதழும் எடுத்து வைத்துள்ளனர். எனவே பரமசிவனை வேறொரு திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலியாக திருமணம் ஆகவில்லை என்று சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சொத்துக்காக தங்களை பிரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கு கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கைக்குழந்தைகளுடன் பரமசிவம் மற்றும் மீனா தம்பதியினர் வந்திருந்தனர். அப்போது திடீரென மீனா தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி செய்தார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீ குளிக்க முயன்ற மீனாவை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். மேலும் மீனா மற்றும்பரமசிவத்தை மீட்டு சிப்காட் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்த போது இருவரும் போலீசார் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரையில் புரண்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை எடுத்து இருவரையும் விசாரணைக்காக சிப்காட் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் கை குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி
கைக்குழந்தையுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி .
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட பின் அந்த தட்டை தானே கழுவி கொடுத்த எஸ்.பி பாலாஜி சரவணன்!
அடுத்த
பட்டா வழங்காததை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்.
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026