விளாத்திகுளம் அருகே பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் எட்டையபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையபுரம் பேரூராட்சி கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி தலைமை வகித்தார்.செயல் அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தார் . குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா,குழந்தைதிருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர்,நிதி ஆதரவுத்திட்டம்,போக்சோ சட்டம், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்தல்,குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098, குழந்தைகள் பாதுகாப்பு,சட்டப்படியான குழந்தைகள் தத்தெடுப்பு , பள்ளி இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து கல்வியை தொடரச் செய்வது குறித்து பேசினார்.மாணவர்களிடையே போதைப்பழக்கம் தடுத்தல், குழந்தை வளர்ப்பில், பெற்றோரின் பங்களிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் உறுப்பினர்களின் பங்கு குறித்து பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி பேசினார்.
உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.இக்கூட்டத்தில் எட்டையபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவனுத்தாய், தலைமை ஆசிரியர் ரமேஷ், சைல்டுலைன் பணியாளர் குருபாரதி, கிராம சுகாதார செவிலியர் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் ,கலந்து கொண்டனர்.