ஓட்டப்பிடாரம் அருகே எப்போதுவென்றான் கண்மாய் மறுசீரமைப்பு பணிகள் - எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எப்போதுவென்றானில் 443 ஹெக்டேர் ஆயகட்டு பரப்பளவு கொண்ட கண்மாய் உள்ளது. இதன் மூலமாக அப்போது விவசாயிகள் பெரிதும் பயன்பெற்று வருகின்றனர். ராபி பருவ சாகுபடி தொடங்க உள்ள நிலையில், கண்மாயில் சேதமடைந்துள்ள கண்மாய் கரை, வாறுகால், மறுகால் பகுதிகளை சீரமைக்க வேண்டும், கண்மாய் ஆழத்தினை அதிகாரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.மேலும் பருவமழை தொடங்க உள்ளதால் மழைநீர் அதிகளவில் சேமிக்கும் வகையில் கண்மாயை தயார்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கண்மாய் மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் நீர்வளத்துறை நிர்வாக பொறியாளர் வசந்தி உதவி செயற்பொறியாளர் சுபாஷ் உதவி பொறியாளர் உருவாட்டி 

ஒப்பந்ததாரர் இசக்கி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்...