விளாத்திகுளத்தில், காவல்துறை சார்பில் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளாத்திகுளம் டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையில் உட்கோட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களில் இருந்தும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் என ஏராளமானோர் சுமார் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து கொண்டு சென்று ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.இந்த விழிப்புணர்வு பேரணியானது,
விளாத்திகுளம் ஆற்றுப்பாலத்தில் இருந்து துவங்கி எட்டையபுரம் ரோடு, மதுரை ரோடு, கீழரத வீதி வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதில் விளாத்திகுளம் டி.எஸ்.பி ஜெயச்சந்திரன், பேரணியில் ஈடுபட்ட போலீசாரிடம் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது எப்போதும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், அதேபோன்று வாகன ஓட்டிகளிடமும் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்கள் பற்றியும், அணிவதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.