கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அவற்றை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோருடன் ஆய்வு செய்து பேசினார். கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றிய தலைவர்  கஸ்தூரி சுப்புராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ்குமார், ராணி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து கோவில்பட்டியில்  கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ஸநபார்டு வங்கி உதவியுடன் ரூ.60.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அரசு கால்நடை மருத்துவமனை புதிய கட்டிடம் , இனாம்மணியாச்சி இ.பி. காலனியில் ரூ.28 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம், ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சமையல் அறை கூடம் ஆகியவற்றை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். இதேபோல் சத்திரப்பட்டி கிராமத்தில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.நிகழ்ச்சிகளில் தாசில்தார் லெனின், திமுக ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் ஏஞ்சலா சின்னதுரை, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தானம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை தலைவர் அமலிபிரகாஷ், நகராட்சி கவுன்சிலர்கள் ஜேஸ்மின் லூர்துமேரி, உலகராணி தாமோதரன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சூர்யராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாரதி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன், இலுப்பையூரணி ஊராட்சி மன்ற தலைவி செல்வி, நாலாட்டின்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவி கடல்ராணி அந்தோணிராஜ், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் தங்க மாரியம்மாள், யூனியன் கவுன்சிலர் முத்துமாரி தாமோதரக்கண்ணன், மாவட்ட பிரதிநிதி மாரிச்சாமி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.