தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஜமீன்தேவர்குளத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும் 108 பயனாளிகளுக்கு 25லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு பல்வேறு துறை சார்பில் வைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அப்போது ஜமீன்தேவர்குளம் இந்து துவக்கப்பள்ளி மாணவர்களும் கண்காட்சியில் தங்கள் படைப்பினை வைத்து இருந்தனர். அதனை பார்த்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கெளுத்தும் வெயிலில் ஏன் இவர்களையும் நிற்க வைத்துள்ளீர்கள் என்றார் கேட்டார். 
மாணவர்கள் உங்களை பார்க்க வேண்டும், எங்கள் படைப்புகளை காட்ட வேண்டும் என்பதால் நிற்பதாக கூறினர். உண்மையாகவா என்ற கேட்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்களின் படைப்புகளை பார்வையிட்டது மட்டுமின்றி மாணவர்களை பாராட்டினார். அப்போது மாணவர்கள் தங்கள் ஆசிரியர் கற்றுக்கொடுத்த நல்வழிப்படுத்துல் பாடலை பாட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அந்த பாடலை முழுவதும் கேட்டு விட்ட, பாடல் படுவது முக்கியமில்லை, அதன் படி வாழ்வில் நடக்க வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் ஜமீன்தேவர்களும் பள்ளி மாணவர்கள் தங்கள் படைப்புகளை கண்காட்சியில் வைத்தது மட்டுமின்றி, தங்கள் கற்றதை என்னிடம் எடுத்துரைத்தனர். ஒரு ஊர் எந்தளவு சிறப்பாக இருக்கும் என்றால், அந்த ஊரில் உள்ள பள்ளியும், பள்ளிக்குழந்தைகளையும் பார்த்தால் தெரியும், ஒரு சமூக சிந்தனையுள்ள மாணவர்களாக உருவாக்கி வருகின்றனர். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதாக கூறினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி சார் ஆட்சியர் மற்றும் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் (பொ) கௌரவ்குமார், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பாலசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், சமூக பாதுகாப்புத்திட்ட துணை ஆட்சியர் செ.ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் தேவி ராஜகோபால், ஜமீன்தேவர்குளம் ஊராட்சிமன்றத் தலைவர் ராமசாமி, துணைத் தலைவர் சு.பாலகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.