விளாத்திகுளத்தில் பேரூராட்சி கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி 15-வது வார்டான வேம்பார் ரோட்டில் பல நாட்களாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் குடிநீர் குழாய் அருகிலேயே இவ்வாறு கால்வாய் அசுத்தமான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேரூராட்சியின் பல தெருக்களில் இதேபோன்று கழிவுநீர் கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதுபுறம் இருக்க விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளில் முழுவதும் குடிநீர் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து சுகாதாரமற்றதாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இதுபோன்று பேரூராட்சியின் அலட்சியப்போக்கை திமுக-வைச் சேர்ந்த பேரூராட்சி மன்றத் தலைவர் அய்யன்ராஜ், செயல் அலுவலர் என யாரும் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர். 
அதுமட்டுமின்றி தங்களது வார்டுகளில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்ய பேரூராட்சி தலைவரிடம், வார்டு உறுப்பினர்கள் கூறினாலும் செவிசாய்ப்பதில்லை என கூறப்படுகிறது....