தூத்துக்குடி 60 நாள் மீன்பிடி தடைக்காலத்திற்கு பின்பு இன்று அதிகாலை முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல இருந்த நிலையில் மன்னர் வளைகுடா மற்றும் தென் கடலோரப் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசு கூடும் என்பதால் வருகிற 18-ஆம் தேதி வரை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவிப்பு.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக அறிவிக்கப்பட்டு இருந்த 60 நாட்கள்மீன்பிடி தடைக்காலம் .
நேற்றுடன் நிறைவடைந்தது இதை அடுத்து தூத்துக்குடியில் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து இன்று அதிகாலை முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தயாராக இருந்தனர் ஏராளமான படகுகளில் கடலுக்கு செல்வதற்காக ஐஸ் உள்ளிட்டவற்றை ஏற்றி தயார் நிலையில் இருந்தனர்.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு துறையின் எச்சரிக்கை செய்தியின் படி மன்னார் வளைகுடா கடல் பகுதி தென்கடலோர பகுதி மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வரையிலும் 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீச கூடும் இதன் காரணமாக கடலில் படகுகள் மீன் பிடித்தால் படகுகள் காற்றில் மீன் பிடிக்க முடியாத அபாயம் ஏற்படும் எனவே வருகிற 18-ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
60 நாட்களுக்கு பின்பு கடலுக்கு செல்ல தயாராக இருந்த விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர் விசைப்படகு தொழிலாளர்கள் 60 நாட்களுக்கு பின்பு கடலுக்கு செல்ல தயாராக இருந்த நிலையில் இன்னும் நான்கு நாட்கள் தாங்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.