இன்று முதல் சென்னை- போடிநாயக்கனூர் இடையேயான ரயில் சேவை!

தமிழ்நாட்டில்  இதுநாள் வரை தேனி மாவட்டத்தில் மட்டும்தான் ரயில் சேவை இல்லாமல் இருந்து வந்தது. அந்த குறையை தீர்க்கும் வகையில் சென்னை- போடிநாயக்கனூர் இடையேயான ரயில் சேவையை இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்கிறார். வாரம் மும்முறை இயக்கப்படும் இந்த ரயில் காட்பாடி, சேலம், கரூர், வழியாக மதுரை சென்று அங்கிருந்து உசிலம்பட்டி, தேனி வழியாக போடி செல்கிறது.