விளாத்திகுளத்தில் மாணவ, மாணவிகளை இனிப்பு வழங்கிவரவேற்ற பள்ளி நிர்வாகம்!

கோடை விடுமுறைக்கு பின்  தமிழகம் முழுவதும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கபட்டது,  பள்ளி மாணவ மாணவிகளை வரவேற்கும் விதமாக,  மாணவ மாணவிகளுக்கு, மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக என  பல்வேறு பகுதிகளில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து வந்து மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கீழ ரத வீதியில் அமைந்துள்ள எஸ்என்டி நர்சரி பிரைமரி பள்ளியில்,2023 - 24 கல்வி ஆண்டுக்கான   வகுப்புகள்.. இன்று துவக்கப்பட்டது

புதிதாக சேர்க்கையான மாணவ மாணவியருக்கு பள்ளி தலைமை ஆசிரியை ரேவதி,மற்றும் ஆசிரியைகள் சுகந்தி, புனிதா, கவிதா, ஆகியோர் இனிப்பு உருண்டைகள் வழங்கி வரவேற்றனர்... இந்நிகழ்வு குழந்தைகளிடையே குதூகாலத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது....