கோவில்பட்டி அருகே கோவில் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் - சீறிபாய்ந்து சென்று பரிசுகளை தட்டிச் சென்ற மாட்டு வண்டிகள்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கிழவிபட்டியில் ஸ்ரீ மலை அலங்காரியம்மன், புது அம்மன், துர்க்கையம்மன்,மலையடி கருப்பசாமி திருக்கோவில் ஆனி பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

சின்ன மாடு, பூஞ்சிட்டு என்று 2 வகையில் போட்டிகள் நடைபெற்றது. 10 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டியில் 10 மாட்டு வண்டிகளும், 8 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 11 மாட்டுவண்டிகளும் பங்கேற்றன.இந்த போட்டியில் காளைகள் சீறிபாய்ந்து சென்று எல்லையை தொட்;டு சென்று பரிசுகளை தட்டிச்சென்றன. சீறிபாய்ந்து சென்ற காளைகளை மக்கள் சாலையின் இருபுறமும் நின்ற பார்த்து ரசித்தனர். சிறிய மாட்டு வண்டி போட்டியில் நெல்லை மாவட்டம் சீவலப்பேரியை சேர்ந்த சுப்பையா மாட்டு வண்டி முதலிடத்தினையும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த வீரஜோதி மாட்டு வண்டியும் முதலிடம் பெற்றன.பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல் 3 இடங்களை பெற்ற மாட்டு வண்டிகளும், சாரதிகளுக்கும் பரிசு தொகை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.