தூத்துக்குடி தமிழகம் மற்றும் கேரள கடல் பகுதிகளில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் திரேஸ்புரம் கடற் பகுதியில் பிடிக்கப்பட்ட மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி சீலா கிலோ 1600 வரையும் விளைமீன் கிலோ 500 வரையும் ஊலி கிலோ 600 வரையும் விற்பனையானது

மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக தமிழகத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை இந்நிலையில் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் கேரள கடற் பகுதியிலும் விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது

பள்ளி விடுமுறை தினம் என்பதால் தூத்துக்குடியில் உள்ள திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுக ஏழக் கூடத்தில் மீன்களை வாங்க இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையிலும் தமிழகம் மற்றும் கேரள கடல் பகுதியில் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாததால் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது.

சீலாமீன் கிலோ 1200 முதல் 1300 வரையும், விளை மீன் கிலோ 500 வரையும், ஊலி கிலோ 600 ரூபாய் வரையும், பாறை கிலோ 500 ரூபாய் வரையும் ,சாலை மீன் ஒரு கூடை 3000 ரூபாய் வரையும் ஒரு கிலோ 500 ரூபாய் வரையும் நண்டு கிலோ 250 ரூபாய் வரையும் விற்பனையானது.

மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் விடுமுறை தினம் என்பதால் விலையையும் பொறுப்பெடுத்தாமல் பொதுமக்கள் மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.