தூத்துக்குடியில் கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட திமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதி 100 ஆவது பிறந்தநாள் விழா எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. கலைஞர் அரங்கம் முன்பு உள்ள கலைஞரின் திருவுருவச் சிலை முன்பு   திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு கலைஞர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். 

முன்னதாக ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன், சுகாதார குழு தலைவர் எஸ் சுரேஷ் குமார், துணை மேயர் ஜெனிடா செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி,  கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், , வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், துணை அமைப்பாளர் ரூபஸ் ஆசிர்வாதம், மீனவர் அணி அந்தோணி ஸ்டாலின், வர்த்தக அணி கிறிஸ்டோபர், மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன் வட்டச் செயலாளர் வழக்கறிஞர் சதீஷ்குமார்,  கதிரேசன், முன்னாள் மாவட்ட உறுப்பினர் ஏ.சி செந்தில்குமார், மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.