தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயங்கி வரும் 68 டாஸ்மாக் மதுபான கூடங்களை அகற்ற கோரி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவிப்பு....

தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் இயங்கி வரும் மதுபான கூடங்களின் எண்ணிக்கை குறித்து டாஸ்மாக் மேளாளரிடம் கேட்டிருந்தார் இதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 142 அரசு மதுபான கடைகளில் 74 கடைகளுக்கு மட்டுமே பார் உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதி உள்ள 68 கடைகள் பார் இல்லாத கடைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் இந்த 68 கடைகளும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவுடன் நடைபெற்று வருவதாக தெரிகிறது

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சித்ராங்க தன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜிடம் மனு அளித்தனர் 

இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 142 அரசு மதுபான கடைகளில் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் 68 மதுபான கூடங்களை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பள்ளி கல்லூரிகள் அருகே உள்ள அரசு மதுபான கடைகளை அகற்ற வேண்டும் வரும் 15 தினங்களுக்குள் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டால் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர்.