தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையபுரம் தேர்வு நிலைப் பேரூராட்சி அலுவலகத்தில் பொது நிதி- 2022-23யின் கீழ் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் (மன்றக் கூட்டரங்கம் மற்றும் அலுவலகக் கட்டடம்) நடைபெற்றுவரும் பராமரிப்புப் பணிகளை உயர்திரு. மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் எட்டையபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் திருமதி.ராமலெட்சுமி, செயல் அலுவலர் (எட்டையபுரம் பேரூராட்சி) திரு. சுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் திரு.சிவக்குமார் ஆகியோர் உள்ளனர்.