விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உணவு பாதுகாப்புத்துறை விழிப்புணர்வு வாகனத்தை கொடிய சேர்த்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் உணவு கலப்படம், பொதுமக்கள் உணவு வணிகர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் இடையே உணவு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார், பின்னர் வாகனத்தில் உள்ள பகுப்பாய்வு கூடத்தினை ஆய்வு மேற்கொண்டார் , இந்நிகழ்வில் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.