
வாறுகால் வசதி இல்லை என்பதால் குட்டையாக தேங்கிய கழிவு நீர் - தொற்று நோய்களால் அவதிப்படும் மக்கள் - நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 25வது வார்டு ஜோதி நகர் 2வது தெரு மேற்கு பகுதியில் சரியான வாறுகால் வசதி இல்;லை என்பதால் கழிவு நீர் குட்டையாக தேங்கி இருப்பதால் துர்நாற்றுமும், தொற்று நோய்களும் பரவி வருவதால், வாறுகால் வசதி அமைக்கவும், கழிவு நீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 25வது வார்டு ஜோதி நகர் 2வது தெரு மேற்கு பகுதியில் சரியான வாறுகால் வசதி இல்லை என்பதால் கழிவு நீர் அப்பகுதியில் குட்டை போல் தேங்கி நிற்கிறது. மேலும் சாலைகளில் கழிவு நீர் செல்லும் நிலை உள்ளது. கழிவு நீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி தொற்று நோய்கள் பரவி வருகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பொது மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வரும் நிலை உள்ளதாகவும், இது குறித்து பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கமால் உள்ளதாகவும், சரியான வாறுகால் வசதி செய்து தர வேண்டும், குட்டை போல் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற வேண்டும், போதுமான சாலை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கூறி காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அப்பகுதி பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி நிர்வாகம் இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.