விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் வருவாய் தீர்வாய சிறப்பு முகாமில்(ஜமாபந்தி) 467 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் தகவல்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட காடல்குடி, சிவஞானபுரம், புதூர், வேம்பார், விளாத்திகுளம் குறுவட்ட பகுதியில் உள்ள 46 கிராமங்களுக்கு கடந்த மே மாதம் 16-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பட்டா,சிட்டா, முதியோர் உதவித்தொகை உட்பட இதர கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அளிப்பதற்காக விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆணையர் செல்வநாயகம் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்த வருவாய் தீர்வாய சிறப்பு முகாமில் (ஜமாபந்தி) பொதுமக்களிடமிருந்து மொத்தமாக 467 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.