விளாத்திகுளம் பேருந்து நிலையம் உள்ளாட்சி தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் உள்ளாட்சி தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
*தூய்மை பணி உட்பட உள்ள உள்ளாட்சிப் பணிகளை வெளிச்சந்தை முறையில் பணியமர்த்தாதே
* 10 வருடங்கள் பணி செய்தவர்களுக்கு பணியை நிரந்தர படுத்த வேண்டும்
*குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்
* வாரம் ஒரு முறை விடுப்பு வழங்க வேண்டும் அல்லது கூடுதல் பணி நேர ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் பேரூராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.