தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கொல்லம்பரும்பு கிராமத்தில் அருள்மிகு சந்தனமாரியம்மன், ஸ்ரீ அயனார், ஸ்ரீ வடக்கு வரச் செல்லியம்மன்,கோவில் கொடை விழா முன்னிட்டு சின்ன மாடு , பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இதில் சின்ன மாட்டு வண்டி போட்டியில் 10 மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 17 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிகளை மாட்டு வண்டி மாவட்ட கழக செயலாளர் விஜயகுமார், தொடங்கி துவக்கி வைத்தார்.
6 மைல் தூரம் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை குமரெட்டியாபுரம் மகாவிஷ்ணு, மாட்டு வண்டியும், 2-வது பரிசை சக்கம்மாள்புரம் கமலா, மாட்டு வண்டியும், 3-வது பரிசை கச்சேரிதளவாய்புரம் கருமாரியம்மன்,மாட்டு வண்டியும் வெற்றி பெற்றது.இதனை தொடர்ந்து நடைபெற்ற 4-மைல் தூரம் நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் துத்திநத்தம் மாட்டுவண்டி முதலிடத்தையும், 2-வது இடத்தை அரசடி ஆகாஷ் மாட்டு வண்டியும், 3-வது இடத்தை துலுக்கன்குளம் சடையாண்டி மாட்டு வண்டியும்,பிடித்தன.
பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று கண்டு ரசித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி மட்டு வண்டி உரிமையாளர்களுக்கு, மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசு தொகை வழங்கப்பட்டது...