தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கனிராஜ் (48). அரசு பஸ் நடத்துனராக பணியாற்றி வருகிறார் . இவர் கடந்த மே 28ம்தேதி தனது வீட்டு முன் தனது பைக்கை நிறுத்தியிருந்தார். மறுநாள் பார்த்த போது பைக்கை காணவில்லை. யாரோ திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து கனிராஜ், கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச்சேர்ந்த மணிகண்டன் மகன் சக்திகணேஷ் (22) என்பவர் பைக்கை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த சக்திகணேஷ்சை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் பைக் திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும் சக்திகணேஷ், மதுரையில் இரண்டு இடங்களில் பைக் திருடியது தெரிய வந்தது.
இந்த மூன்று பைக்குகளில் ஒரு பைக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரத்தைச் சேர்ந்த ராஜா (46) என்பவரிடம் விற்றுள்ளார். அவர், அங்குள்ள பேரூராட்சியின் 2வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருப்பதும், முன்னாள் பேரூராட்சி தலைவராக இருந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி
பைக் திருட்டு வழக்கில் அதிமுக முன்னாள் பேரூராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது .
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் கஞ்சா விற்றவர் கைது - 2 கிலோ கஞ்சா பறிமுதல்.
அடுத்த
ஓட்டப்பிடாரம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் - சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்.
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026