"நான் பண்ண தப்பு.... இந்த பொம்பளைக்கு ஓட்டு போட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியது மிகப்பெரிய குற்றம்" - கனிமொழி எம்.பி. -யை ஒருமையில் சாடிய புதிய தமிழகம் Dr. கிருஷ்ணசாமி!தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் புதிய தமிழக கட்சியின் சார்பில் நடைபெற்ற மதுவிலக்கு மற்றும் டாஸ்மாக் ஊழல் குறித்த மாபெரும் விளக்க பொதுக்கூட்டத்தில் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடம் பேசிய கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி, "நான் பண்ண தப்பு.... இந்த பொம்பளைக்கு ஓட்டு போட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியது மிகப்பெரிய குற்றம்" என்றும் "கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா..." என்றும் கனிமொழி எம்.பி.யை  ஒருமையில் பேசி விமர்சனம் செய்தார்.புதிய தமிழகம் கட்சி சார்பில், "1 லட்சம் கோடி ஊழல் - டாஸ்மாக் ஒழிப்பு யுத்தம்" - எனும் தலைப்பில் மதுவின் தீமைகள் குறித்தும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தியும்  மாபெரும் விளக்க பொதுக்கூட்டம் முதற்கட்டமாக விளாத்திகுளம் (தூத்துக்குடி), வீரவநல்லூர் (நெல்லை),  சிவகாசி (விருதுநகர்), சத்திரக்குடி (இராமநாதபுரம்), பாலமேடு (மதுரை), பெரியகுளம் (தேனி), பழனி (திண்டுக்கல்) ஆகிய 7 மாவட்டங்களில் நடத்தி வருகின்றனர். இதையொட்டி இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில், மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியை நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் டாக்டர்.கிருஷ்ணசாமி டாஸ்மாக் ஊழல் மற்றும் பூரண மதுவிலக்கு குறித்து தான் எழுதிய புத்தகத்தை வெளியிட்டு அங்கிருந்த கட்சியினர், பொதுமக்களை என அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து "கட்சியினர் அனைவரும் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீது ஆணையாக மதுவிற்கு எதிராக  உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்".

இதைத்தொடர்ந்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது;

நான் பண்ண தப்பு.... இந்த பொம்பளைக்கு ஓட்டு போட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியது மிகப்பெரிய குற்றம்.. ஏதோ ஒரு பெண்மணி இங்கிருந்து நாடாளுமன்றத்திற்கு போய் தமிழ்நாட்டின் வாழக்கூடிய 7 கோடி மக்களுக்காக குரல் கொடுப்பார் என்ற நல்லெண்ணத்தில் தான் ஓட்டு போட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பினோம் ஆனால் தமிழ்நாட்டை நாசம் செய்வதற்கு காரணமாக இருப்பார்கள் என்று நினைக்கவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள 19 மது ஆலைகளில் 17 திமுக குடும்பத்திற்கு மட்டுமே சொந்தம்.

சாதாரண மக்கள் எளிய மக்கள் இருக்கும் இடத்திலேயே மதுக்கடைகளை வைப்பதாகவும்... எதுல சமூகநீதியை கடைப்பிடிக்கிறார்களோ இல்லையோ இதில் மட்டும் அமலாக்குகிறார்கள்.

செந்தில் பாலாஜி 5362 பார்களில் இருந்து சட்ட விரோதமாக அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை கஜானாவில் செலுத்தாமல் அவரின் சகோதரரை விட்டு கரூர் பார்ட்டி என்ற அடியாட்களை கொண்டு பல கோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

(மது டாஸ்மாக் இருக்கின்ற காரணத்தினால் இளம் விதவைகள் இன்றைக்கு அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்று ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்தயேமா கொஞ்சமாச்சு மனசாட்சி வேண்டாமா உனக்கு... திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் மது அருகிலேயே முழுவதும் என்று சொன்னீயே என திமுக எம்பி கனிமொழியை ஒருமையில் விமர்சனம் செய்தார்.)