கோவில்பட்டி அருகே அழகு முத்து கோன் பிறந்தநாள் விழாவிற்கு சென்றார்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் - போலீசார் அடிதடி - போலீசார் மீது கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு!
சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டுதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள முத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மரியாதை செலுத்த பலரும் இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் மதுரை - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அழகுமுத்துக்கோன் நினைவு வளைவில் ஏறி ஒரு இளைஞர் சமூக கட்சி கொடியை ஏற்றியதாக தெரிகிறது.இதையடுத்து போலீசார் அந்த இளைஞரை விசாரணைக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.
இதனை கண்டித்து மரியாதை செலுத்த சென்றவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.சிலர் போலீசார் மீது கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் நடத்திய தடியடியில் சில இளைஞர்கள் காயம் அடைந்தனர்.
நெல்லை மண்டல டிஐஜி பரவேஷ்குமார், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.