தமிழ்நாடு காமராஜர் பேரவையின் ஒருங்கிணைப்பில் வருகிற ஜூலை 15ம் தேதி கர்மவீரர் காமராஜர் அவர்களின்121வது பிறந்தநாள் விழா கல்வித்திருவிழாவாக கொண்டாடப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு  பள்ளி மாணவர்களுக்கான கலை& இலக்கியப் போட்டிகள் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றன. 

6 முதல் 12ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கான

ஓவியப்போட்டி,

பேச்சுப்போட்டி,

கட்டுரைப்போட்டி மற்றும்

கவிதைப்போட்டிகள் நடத்தப்பட்டன

மேற்குறிப்பிட்ட போட்டிகளில் 25 பள்ளிகளின் சார்பாக 220 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ப.ஜான்கணேஷ் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு காமராஜர் பேரவையின் தலைவர் தா.நாஞ்சில் குமார், இயக்குனர் க.தமிழரசன், விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஆ.சம்பத்குமார்,  அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கா.கருப்பசாமி, ஜெய் கிறிஸ் அறக்கட்டளையின் வழக்கறிஞர் ஜெயஶ்ரீ கிறிஸ்டோபர், காமராஜர் பேரவையின் கோவில்பட்டித் தொகுதி பொறுப்பாளர் பா.அசோகன் ஆகியோர் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 

மேற்கண்ட நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.