தூத்துக்குடி மாநகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவர் கைது:  அவரிடம் இருந்து பத்தாயிரம் லாட்டரி சீட்டுகள் பறிமுதல்.தூத்துக்குடி மாநகர பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.தூத்துக்குடியில் உள்ள வேலவன் ஹைபர் மார்க்கெட்  அருகே ஒருவர் போலீசாரை கண்டவுடன் ஓடினார்.  உடனடியாக போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் கேரளா லாட்டரி சீட்டை விற்பனை செய்து வந்தது. மேலும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்த சந்திர பாலன் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்  2.50 கோடி ரூபாய் பரிசு தொகை என பொதுமக்களிடம் தெரிவித்து லாட்டரி சீட்டை விற்பனை செய்து வந்தது. தொடர்ந்து அவரிடம் இருந்து சுமார் 10,000 லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.