தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் ஆசிரியர்களிடம் பணம் பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்த ஆதவா தொண்டு நிறுவன இயக்குனர் பால குமரேசனை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம். ஆதவா தொண்டு நிறுவன இயக்குனர் பாலகுமாரேசன் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்களிடம் ரூபாய் மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு அரசு பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காமல் இயக்குனர் பால குமரேசன் ஏமாற்றி வந்துள்ளார் இதை தொடர்ந்து ஆசிரியர்கள் பாலகுமரேசனை தொடர்பு கொள்ள முயன்ற போது தலைமறைவான பாலகுமாரேசன் தன்னிடம் பணம் கேட்பவர்களளை வாட்ஸ்அப் மூலம் ஆசிரியர்களிடம் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பால குமரேசன் மீது பலமுறை புகார் தெரிவித்ததுடன் அவரை கைது செய்து தங்களிடம் மோசடியாக பெறப்பட்ட பணத்தை மீட்டுத் தருமாறு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர்கள் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களிடம் மோசடியில் ஈடுபட்டதுடன் வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் விடும் ஆதவா தொண்டு நிறுவன இயக்குனர் பாலகுமாரேசனை கைது செய்ய கோரியும் தங்களிடம் மோசடியாக பெறப்பட்ட பணத்தை மீட்டு தரகோரி பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தூத்துக்குடி
ஆதவா தொண்டு நிறுவன இயக்குனர் பால குமரேசனை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதூரில் ஹோட்டல் முன்பு கொடூர தாக்குதல் - 3 பேர் கைது!
அடுத்த
விளாத்திகுளம் தொகுதியில் திமுக சமூக வலைத்தள பிரிவு நிர்வாகிகள் எம்.எல்.ஏ-விடம் வாழ்த்து பெற்றனர்.
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026