தூத்துக்குடி முத்தையாபுரத்தில் வெல்டர் மீது கண்டெய்னர் லாரி ஏறியதில் நிகழ்விடத்திலேயே தலை நசுங்கி வாலிபர் பலி மற்றொருவர் படுகாயம் முத்தையாபுரம் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை. தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் தங்கம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை இவர் இவர் வெல்டிங் தொழில் செய்து வருகிறார் இன்று வேலை இல்லாத காரணத்தால் தன்னுடன் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சுயம்புலிங்கத்தையும் அழைத்துக் கொண்டு தூத்துக்குடி சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் போது முத்தையாபுரம் ரவுண்டானா அருகே வந்தபோது இவர்கள் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கண்டெய்னர் லாரியின் பின்பக்க டயரில் விழுந்துள்ளனர் .
இதில் சம்பவ இடத்திலேயே கண்டெய்னர் லாரியின் டயர் சின்னத்துரையின் தலையில் ஏறியதில் நிகழ்விடத்திலேயே மூளை சிதறி பரிதாபமாக பலியானார் இவருடன் வந்த நண்பர் சுயம்புலிக்கத்தின் கால்கள் உடைந்து படுகாயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .இந்த விபத்து குறித்து தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் கண்டெய்னர் லாரி ஏறியதில் நிகழ்விடத்திலேயே தலை நசுங்கி வாலிபர் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அனுமதிக்கபட்ட ஒலியளவு எவ்வளவு? கோவில் விழாக்களில் தொடரும் விதிமீறல்கள்... கண்டுகொள்ளாத காவல்துறை!
அடுத்த
"தேய்பிறை அஷ்டமியை" முன்னிட்டு விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு !
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026